230 கிலோ குட்கா பறிமுதல்


230 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jan 2022 2:39 AM IST (Updated: 7 Jan 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

230 கிலோ குட்கா பறிமுதல்

களியக்காவிளை:
களியக்காவிளை அருகே பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கண்ணுமாமூடு பகுதியில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குடோனில் மூடை, மூடையாக குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குடோனில் மொத்தம் 230 கிலோ குட்கா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த கோபாலன் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story