தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்க்கவே மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தாமதம் - சித்தராமையா குற்றச்சாட்டு


தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்க்கவே மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தாமதம் - சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2022 3:27 AM IST (Updated: 7 Jan 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்க்கவே மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக, சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சித்ரதுர்கா:

பேச்சுக்கே இடம் இல்லை

  சித்ரதுர்காவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

  மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி நாங்கள் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரையை கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து நடத்தி காட்டுவோம். எக்காரணத்தை கொண்டும் பாதயாத்திரையை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை.

  மேகதாது அணை திட்டம் இல்லை. அரசியல் நிகழ்ச்சி என்று கோடிஹள்ளி சந்திரசேகர் கூறியுள்ளார். மேகதாது விஷயத்தில் அரசியல் எதுவும் இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்த போது மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

144 தடை பிறப்பித்தாலும்...

  தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்தாலும் 2 பேராவது நடந்து சென்று எங்களுடைய பாதயாத்திரையை நிறைவு செய்வோம். காங்கிரஸ் கட்சியை மக்கள் மறந்து விடுவார்கள் என்பதற்காக மேகதாது திட்ட பாதயாத்திரையை நாங்கள் கையில் எடுத்து உள்ளதாக நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

  அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தது என்பது பற்றி அவருக்கு என்ன தெரியும். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் கொடுக்க வேண்டாம் என்று கூறி உள்ளோம். அப்படி கொடுத்தால் நாம் அந்த அமைப்பினரிடம் கை கட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story