பெங்களூருவில் ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டா் உள்பட 14 போலீஸ்காரர்களுக்கு கொரோனா
பெங்களூருவில், ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு:
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
பெங்களூருவில் கொரோனா 3-வது அலை தொடங்கி இருப்பதால், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2-வது அலையின் போது பெங்களூருவில் ஏராளமான போலீஸ்காரர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததுடன், பலியும் ஆகி இருந்தனர். தற்போது 3-வது அலையின் போதும் போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு பணியாற்றும் 89 போலீஸ்காரர்களில், 43 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவ்வாறு நடந்த பரிசாதனையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது.
கிருமிநாசினி தெளிப்பு
அவர்களில் சிலர் ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த போலீஸ்காரர்களுடன் தொடர்பில் இருந்த போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதுபோல், மத்திய மண்டலத்தில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூருவில் போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது சக போலீசார் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story