டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு


டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 7 Jan 2022 4:01 AM IST (Updated: 7 Jan 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

குளச்சல்;
குளச்சல் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 
 வாலிபர்
கருங்கல் அருகே உள்ள படுவூர் சகாயநகரை சேர்ந்தவர் எட்வின் ஜஸ்டஸ். இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், எட்வின் ஜிஜோ(19) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றனர். 
இதனால், எட்வின் ஜிஜோ பாலிடெக்னிக் முடித்து விட்டு பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்தார்.
டிரான்ஸ்பார்மர் மீது மோதல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு எட்வின் ஜிஜோ கருங்கல் பகுதியில் இருந்து பாலப்பள்ளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
 சேவிளை பகுதியில் தனியார் மில் அருகில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட எட்வின் ஜிஜோ படுகாயமடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
சாவு
இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி எட்வின் ஜிஜோ பரிதாபமாக இறந்தார். விபத்தில் எட்வின் ஜிஜோ இறந்த தகவல் சவுதி அரேபியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இருவரும் சொந்த ஊர் திரும்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 
இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story