வரவர ராவ் சிறையில் சரண் அடைய பிப்ரவரி 5-ந்தேதி வரை அவகாசம்
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான வரவர ராவ் சிறையில் சரண் அடையும் தேதியை பிப்ரவரி 5-ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான வரவர ராவ் சிறையில் சரண் அடையும் தேதியை பிப்ரவரி 5-ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எல்கர் பரிஷத் வழக்கு
புனே பீமாகோரேகாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்த போர் வெற்றி பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு முந்தைய நாள் புனேயில் நடந்த எல்கர் பரிஷத் மாநாடு தான் காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனவே மாநாட்டில் கலந்து கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சமூக செயற்பாட்டாளரும், கவிஞருமான வரவர ராவ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் நீட்டிப்பு
தற்போது என்.ஐ.ஏ. விசாரித்து வரும் இந்த வழக்கில் 81 வயதான வரவர ராவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார். இதில் நேற்று முன்தினத்துடன் அவரது ஜாமீன் காலம் முடிந்தது.
இந்தநிலையில் கொரோனா பரவல், உடல் நலனை காரணம் காட்டி வரவர ராவின் ஜாமீனை நீட்டிக்க மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பிப்ரவரி 5-ந் தேதி வரை வரவர ராவிற்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது. இதனால் அவர் பிப்ரவரி 5-ந் தேதி வரை சிறையில் சரண் அடைய தேவையில்லை. ஏற்கனவே அவருக்கு 5 முறை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
----
Related Tags :
Next Story