உதவி கலெக்டர் அலுவலகத்தை நடைபாதை வியாபாரிகள் முற்றுகை


உதவி கலெக்டர் அலுவலகத்தை நடைபாதை வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jan 2022 6:34 PM IST (Updated: 7 Jan 2022 6:34 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தினசரி சந்தையில் அகற்றப்பட்ட நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் தரக்கோரி, நகரசபை அலுவலகத்தை நடைபாதை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தினசரி சந்தையில் அகற்றப்பட்ட நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் தரக்கோரி,  நகரசபை அலுவலகத்தை நடைபாதை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் முற்றுகை
கோவில்பட்டி நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் இருந்த 30 நடைபாதை கடை ஆக்கிரமிப்புகளை நேற்று முன்தினம் நகரசபை நிர்வாகம் அப்புறப்படுத்தியது.
இந்த நிலையில் நேற்றுகாலையில் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபாதை கடைகளின் வியாபாரிகள் முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பூலித்தேவர் மக்கள் இயக்கம் தலைவர் செல்லதுரை, அனைத்து ரத்ததான கழக தலைவர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாற்று இடம்...
பின்னர் நகரசபை மேலாளர் பெருமாளை சந்தித்து அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில்,  கோவில்பட்டி நகரசபை  தினசரி சந்தையில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபாதையில் வியாபாரம் செய்துவரும் 30 வியாபாரிகளை நகரசபை நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அகற்றி உள்ளது. இதனால் அந்த வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

Next Story