அயோடின் கலக்காத 2 டன் உப்பு பறிமுதல்


அயோடின் கலக்காத 2 டன் உப்பு பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jan 2022 8:39 PM IST (Updated: 7 Jan 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 டன் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 டன் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மினி லாரியில் சோதனை
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன், கோவில்பட்டி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மற்றும் அலுவலர்கள் கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது மினிலாரியில் இருந்த அயோடின் கலக்காத உப்பு பைகளில், முகவரியும் போலியாக இருப்பது கண்டறியப்பட்டது. 
அயோடின் கலக்காத உப்பு பறிமுதல்
இதையொட்டி மினி லாரி மற்றும் 2 டன் அயோடின் கலக்காத உப்பை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கூறுகையில்,‘ பறிமுதல் செய்யப்பட்ட உப்பு பகுப்பாய்வுக்கு அனுப்பப் படும். பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உப்பை பேக்கிங் செய்த உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு துறை தரங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
பொதுமக்கள் உப்பு வாங்கும்போது, அதில் முழு முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும், அயோடின் கலந்த உப்பு தானா? என்பதையும் உறுதி செய்தபின், அதை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். அயோடின் கலக்காத உப்பை பொதுமக்கள் சமையலுக்கு பயன்படுத்த கூடாது' என்று அவர் கூறினார். 

Next Story