பூங்காக்கள் சுற்றுலா மையங்களுக்கு நேர கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலை தடுக்க நீலகிரியில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது
ஊட்டி
கொரோனா பரவலை தடுக்க நீலகிரியில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. .
சுற்றுலா மையங்கள்
மலைமாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா மையங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பூக்காக்கள் உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும். தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேறகொள்ளப்பட்டு வருகிறது.
அதன் நடவடிக்கையாக நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணி கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.
புதிய கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மற்றும் பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து தோட்டக்கலை பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் படகு இல்லங்கள், சூழல் சுற்றுலா மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.
மாலை 3 மணிக்கு பின்னர் நுழைவு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் சுற்றுலா பயணிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பி அனுப்பப்பட்டனர்
இந்த நிலையில் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவுக்குள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஒரு டோஸ் செலுத்தி இருந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். சிலர் பூங்காவின் வெளியே நின்று புகைப்படம் எடுத்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story