டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவனருள் செல்வம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சிவகுமார், துணைத் தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் புனிதன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் சி.ஐ.டி.யூ. சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வாரவிடுமுறை
தொழிலாளர் நலவாரிய சட்டங்களை டாஸ்மாக் பணியாளர்களுக்கு முறையாக அமல்படுத்த வேண்டும். 8 மணி நேர பணி வரன்முறை செய்து, வார விடுமுறை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன
Related Tags :
Next Story