ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2022 9:29 PM IST (Updated: 7 Jan 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வுசெய்தார். முன்னதாக அத்தியூர் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி, புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கடுவனூர், பாக்கம் புதூர், கானாங்காடு ஆகியஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு திட்ட பணிகள், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள், ஜல் ஜீவன் மிஷன் பணிகள், புதியதாக வெட்டப்பட்டு வரும் திறந்தவெளி கிணறு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வகுமரன், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், நாராயணசாமி, ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story