நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன


நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 7 Jan 2022 9:33 PM IST (Updated: 7 Jan 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக வார இறுதி 3 நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன

நாகப்பட்டினம்:
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி 3 நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்று குறைந்ததால் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. .இதில் நேற்றுமுன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன
வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தினமும் நடைபெறும்  பூஜைகள், வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள  அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று முதல் மூடப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.வழிபாட்டு தலங்களில் கதவுகள்  மூடப்பட்டிருந்ததால் வாசலில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  
புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்,  ‌கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவில்,தேவூர் தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களின் கதவுகள் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டாலும் பூஜைகள் நடத்தப்பட்டன. 

Next Story