தூத்துக்குடியில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று


தூத்துக்குடியில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று
x
தினத்தந்தி 7 Jan 2022 9:39 PM IST (Updated: 7 Jan 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 160 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, பரவல் வேகமெடுத்து வருகிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்து 225 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த 14 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 56 ஆயிரத்து 211 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 412 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story