குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது
கொரோனா பரவல் எதிரொலியாக குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச் சோடியது.
குன்னூர்
கொரோனா பரவல் எதிரொலியாக குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச் சோடியது.
சிம்ஸ் பூங்கா
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டிக்கு அடுத்தபடியாக குன்னூர் நகரம் முக்கியத்துவமாக உள்ளது. இங்குள்ள சுற்றுலா மையங்களுக்கும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு முக்கிய சுற்றுலா மையமாக சிம்ஸ் பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் கண்ணை கவரும் மலர்கள் மட்டுமின்றி நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. குறிப்பாக தெய்வீக மரமான ருத்ராட்சை காகிதம், யானைக்கால் மரம் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்துவிட்டு செல்கிறார்கள்.
வெறிச்சோடியது
இந்த நிலையில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. நேற்று இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றனர்.
Related Tags :
Next Story