2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ெகாடைக்கானலில் படகு சவாரி செய்ய அனுமதி
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ெகாடைக்கானலில் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 படகு குழாம்கள் உள்ளன. இந்த படகு குழாம்களில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முககவசம் அணிந்து, 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகளின் முழு விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. அத்துடன் கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்தல், உடல் வெப்பநிலை பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது.
இதே போன்று தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகளை பூங்கா ஊழியர்கள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story