நகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


நகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2022 9:58 PM IST (Updated: 7 Jan 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

போடியில் நகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போடி:
தேனி மாவட்டம் போடி வ.உ.சி. நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 46). இவர் போடி நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (43). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் 2 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் திலீப்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 
இந்தநிலையில் மாரியப்பன் மது மற்றும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே மது பழக்கத்தை கைவிடமுடியாததால் விரக்தியடைந்த மாரியப்பன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முருகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story