மதுரையில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா


மதுரையில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Jan 2022 10:30 PM IST (Updated: 7 Jan 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 149 பேர் பாதிக்கப்பட்டனர்.

மதுரை, 
மதுரையில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 149 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 8,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதுரையிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. 
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 6,453 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் 149 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் நோய் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி இருக்கிறார்கள். இதனால் நேற்று 7,726 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது
12 பேர் குணமடைந்தனர்
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று 12 பேர் மட்டுமே குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். 
இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து 352 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 22 பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 120 பேர் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டு கண் காணிப்பில் இருக்கிறார்கள். கொரோனா அதிகரிப்பதை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி நடக்கிறது. 
இதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப படுக்கைகளில் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மருத்துவத் துறையினரும் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Next Story