தளி அருகே வாழை, ராகி பயிர்களை நாசம் செய்த யானைகள்


தளி அருகே வாழை, ராகி பயிர்களை நாசம் செய்த யானைகள்
x
தினத்தந்தி 7 Jan 2022 10:41 PM IST (Updated: 7 Jan 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே வாழை, ராகி பயிர்களை நாசம் செய்த யானைகள் நாசம் செய்தன.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள தேவரபெட்டா வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட யானைகள், தேவகானப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு விவசாயிகள் கிருஷ்ணப்பா, சிக்கண்ணாச்சாரி, அணில்குமார், மோட்டப்பா ஆகியோரது வாழை, ராகி உள்ளிட்ட பல ஏக்கர் பயிர்களை மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. அவற்றை ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று மாலை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Next Story