கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 7 Jan 2022 10:41 PM IST (Updated: 8 Jan 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 732 இடங்களில் சனிக்கிழமை 18-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி:
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை 18-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் நடத்தப்பட உள்ளது. ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பகுதிகளில் முகாம் நடைபெறும்.
முன்னுரிமை
இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் அரசு டாக்டர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story