மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது.
மும்பை,
மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது.
40 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 40 ஆயிரத்து 925 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 36 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 20 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை பாதிப்பு
மும்பையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்தநிலையில் நேற்றும் 2-வது நாளாக நகரில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 20 ஆயிரத்து 971 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோல 6 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள்.
தற்போது நகரில் 91 ஆயிரத்து 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் இதில் 6 ஆயிரத்து 531 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சுமார் 29 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. நகரில் இதுவரை 8 லட்சத்து 74 ஆயிரத்து 780 பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தாராவியில் தொற்று
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவி குடிசைப்பகுதியில் தொடர்ந்து வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று அங்கு புதிதாக 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 558 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் நேற்று புதிதாக யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை. இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 876 பேரில் 435 பேர் குணமடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story