நாளுக்கு நாள் வேகமாக உயரும் தொற்று: 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
பாதிப்பு
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 695 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 876 பேர் பலியான நிலையில் 63 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 38 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் நேற்று மட்டும் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 23 பேர் பிற மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த 5-ந் தேதி 8 பேரும், 6-ந் தேதி 17 பேரும், நேற்று முன்தினம் 23 பேரும், நேற்று 38 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வரும் பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story