பனிப்பொழிவால் நெற்பயிர்களை தாக்கும் நாவல் பூச்சிகள்
நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் நெற்பயிர்களை நாவல் பூச்சிகள் தாக்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கலவை அடைந்துள்ளனர்.
முத்தூர்
நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் நெற்பயிர்களை நாவல் பூச்சிகள் தாக்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கலவை அடைந்துள்ளனர்.
கீழ்பவானி பாசனம்
நத்தக்காடையூர், பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை, பரஞ்சேர்வழி சுற்றுவட்டார வருவாய் கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயம் பிரதானம். இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதன்படி நத்தகாடையூர் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் மற்றும் சாதாரண முறையில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டது. இதில் கோ 38, கோ 42, கோ 43, ஐ.ஆர். 20, எமர்ஜென்சி பொன்னி, டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நெல் நாற்றுக்கள் வளர்ந்து கதிர் உருவாகி உள்ளது.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த கடும் பனிப்பொழிவால் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் மேல் பனி திவலைகள் சாரல் மழை போல் விழுகிறது. . இதன் காரணமாக தற்போது நெல் பயிர்களில் நெல் மணிகளை உற்பத்தி செய்யும் பாளைகளில் நாவல் பூச்சிகள் உற்பத்தி ஆகி உள்ளன. இந்த நாவல் பூச்சிகள் நெல்மணிகளை உருவாக்கும் முன்பே பாளைகள், இலைகளை தாக்கி தின்று அழிக்கின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் திடீரென்று பனிப்பொழிவால் நெற்பயிர்களை தாக்கி அழிக்கும் நாவல் பூச்சிகளை அழிப்பதற்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை கடைப்பிடிக்கும் விதமாக தெளிப்பான்கள் மற்றும் மருந்து அடிப்பு கருவிகள் மூலம் ரசாயன மருந்துகளை தெளித்து அடித்து வருகின்றனர். இதன் மூலம் நெல் பயிர்களில் நாவல் பூச்சிகள் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது.
துரித நடவடிக்கை
இன்னும் 2 மாதத்திற்கு மேல் பனிப்பொழிவு நீடிக்கும் சூழ்நிலை உள்ளதால் நாவல் பூச்சிகள் உட்பட பல்வேறு பூச்சி தாக்குதல் பாதிப்புகளில் இருந்து நெற்பயிர்களை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் உரிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை முகாம்கள் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story