கோழிப்பண்ணைகளில் குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


கோழிப்பண்ணைகளில் குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2022 11:38 PM IST (Updated: 7 Jan 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

கோழிப்பண்ணைகளில் தகுந்த குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல்:
கோழிப்பண்ணைகளில் தகுந்த குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடகிழக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 11-ந் தேதி கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும். 
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 45, 45, 50, 50 சதவீதமாகவும் இருக்கும்.
குளிர்கால பராமரிப்பு முறை
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பில்லை. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சு குழல் மற்றும் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
எனவே பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைகளில் தகுந்த குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதித்து அதற்கு தகுந்தார்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story