சமாதான கூட்டத்தை புறக்கணித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளிநடப்பு


சமாதான கூட்டத்தை புறக்கணித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளிநடப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 11:40 PM IST (Updated: 7 Jan 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்க இருந்த சமாதான கூட்டத்தை புறக்கணித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளிநடப்பு செய்தனர்.

சீர்காழி:
சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்க இருந்த சமாதான கூட்டத்தை புறக்கணித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளிநடப்பு செய்தனர்.
முற்றுகை போராட்ட அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகரம் பகுதியில் 100 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்தை எந்தவித குடியிருப்புகளும் இல்லை என்று முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதற்கு சான்று வழங்கிய வருவாய் துறையை கண்டித்தும், ஆரப்பள்ளம் ஊராட்சியில் வடிகால் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.
நீண்டகாலமாக இருந்த நடை பாதையை அடைத்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சீர்காழி தாசில்தார் சண்முகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் உள்ளிட்ட அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
வெளிநடப்பு
இந்தநிலையில் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஏராளமான போலீஸ் பாதுகாப்போடு நேற்று இரவு சமாதான கூட்டம் தாசில்தார் சண்முகம் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் தாசில்தாரை கண்டித்து முற்றுகை போராட்டம் செய்ய இருப்பதால் உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் தான் சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார். 
இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கேசவன், நகர செயலாளர் ஞானபிரகாசம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் சமாதான கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story