மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 20 பேர் காயம்


மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 20 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:08 AM IST (Updated: 8 Jan 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி கிராமத்தில் செகுட்ட அய்யனார், சிறை மீட்ட அய்யனார் மற்றும் படைத்தலைவி அம்மன் கோவிலில் பொங்கல் விழா மற்றும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 
முன்னதாக கிராமத்தினர் செகுட்ட அய்யனாரை வணங்கி விட்டு ஜவுளிகளுடன் வந்து காளைகளுக்கு மரியாதை செய்தனர். அதன் பின்னர் ஒவ்வொரு காளையாக அந்த பகுதியில் அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்த காளைகளை அங்கு திரண்டிந்த இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயன்றனர். 

20 பேர் காயம்

இதில் சில காளைகள் இளைஞர்களிடம் பிடிபட்டது. சில காளைகளை அங்கு திரண்டிருந்தவர்களை மிரட்டிய நிலையில் சீறி பாய்ந்து சென்றது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காளைகள் கலந்துகொண்டன. காளைகள் முட்டியதில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 6 பேர் சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்

Related Tags :
Next Story