கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Jan 2022 12:16 AM IST (Updated: 8 Jan 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

க.பரமத்தி
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கிராவல் மண் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், கரூர் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் தென்னிலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் ஒரு தோட்டத்தில் சிலர் கிராவல் மண் கடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் பிடித்து தென்னிலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மண் கடத்தியது டிராக்டர் உரிமையாளர் வாலநாயக்கன்பட்டியை சேர்ந்த கிட்டுசாமி (வயது 71), பொக்லைன் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த  ராஜா (32), பொக்லைன் ஆபரேட்டர் பிரகாஷ் (22), டிராக்டர் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த ராஜா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் டிராக்டர் டிைரவர் ராஜா, பொக்லைன் ஆபரேட்டர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story