சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும். 19 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரவிடுமுறை, 8 மணி நேர வேலை, மிகை நேர பணிக்கு ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிலை ஆணை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் வெண்ணைமலை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்மஸ்ரீ காந்தன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story