கொலை வழக்கில் தாயாரை சேர்த்ததால் 2 மகள்கள் விஷம் குடித்தனர்


கொலை வழக்கில் தாயாரை சேர்த்ததால் 2 மகள்கள் விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:26 AM IST (Updated: 8 Jan 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தாயாரை சேர்த்ததால் விரக்தி அவருடைய 2 மகள்கள் விஷம் குடித்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரைக்குடி,

கொலை வழக்கில் தாயாரை சேர்த்ததால் விரக்தி அவருடைய 2 மகள்கள் விஷம் குடித்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தியால் குத்தி கொலை

காரைக்குடி கீழஊருணி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். 
அமராவதிபுதூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ராஜ்குமார், ரஸ்தா பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது, கணேசன் உள்ளிட்ட சிலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் கணேசன், சத்யா நகரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (வயது 44) அமராவதிபுதூரைச் சேர்ந்த சுபாஷ், கணேசனின் மனைவி தேன்மொழி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கணேசனும் சுந்தர பாண்டியனும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மகள்கள் விஷம் குடித்தனர்

இந்த நிலையில், கணேசனின் மகள்கள் அஸ்விதா (23), நிவேதா(21)  ஆகியோர் திடீெரன விஷம் குடித்தனர்.
இதில் மயங்கிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
அப்போது, “இந்த கொலை வழக்கில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் எங்களது தாயார் தேன்மொழியை சேர்த்திருப்பது தவறானது. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். எங்கள் தாயாரை வழக்கில் சேர்த்ததால் மன உளைச்சலில் இருந்த நாங்கள் விஷம் குடித்தோம்,” என 2 பேரும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
------------------

Next Story