தனுஷ்கோடியில் இலங்கை வாலிபர் கைது
தனுஷ்கோடியில் இலங்கை வாலிபர் கைது ெசய்யப்பட்டார். அங்கிருந்து கடலில் நீந்தி நாடு திரும்ப இருந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடியில் இலங்கை வாலிபர் கைது ெசய்யப்பட்டார். அங்கிருந்து கடலில் நீந்தி நாடு திரும்ப இருந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசார் ரோந்து
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் நேற்று கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முகுந்தராயபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் இலங்கை வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் சம்பந்தன் (வயது 24) என்பதும், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
சுற்றுலா விசா
விசாரணையில் சம்பந்தன், சுற்றுலா விசா மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னை வந்து தங்கியுள்ளார்.
அதன் பின்னர் ஓசூர் சென்று அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், வேலை பார்த்த இடத்தில் தனது பாஸ்போர்ட் மற்றும் ரூ 60 ஆயிரம் உள்ளிட்ட உடைமைகள் தொலைந்து விட்டதாகவும் அதனால் மீண்டும் இலங்கைக்கு செல்வதற்காக ராமேசுவரம் வந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
வாக்குமூலம்
மேலும் அவர், “தனுஷ்கோடியிலிருந்து இலங்கை அருகாமையில் உள்ளதால் படகு மூலமோ அல்லது கடலில் நீந்தியோ இலங்கை செல்வதற்காக தனுஷ்கோடி வந்தேன்”் என வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கியூ பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story