தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Jan 2022 12:32 AM IST (Updated: 8 Jan 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர், 
கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவரது மனைவி மகேஸ்வரி. இந்தநிலையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆறுமுகம் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story