டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:44 AM IST (Updated: 8 Jan 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ..சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேங்கிக்காலில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மார்க்கண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சக்கரவர்த்தி வரவேற்றார். இதில் குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, பணி நிரந்தரம் உள்ளிட்ட தொழிலாளர் நல சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 26 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பு சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
அதில் டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Next Story