100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வளர்ச்சி நிதி
ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் பொதுமக்கள் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதனையொட்டி அந்த ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆத்தூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமாரிடம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர்.சூரிய குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சாமன்னன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story