ஏற்காடு தனியார் விடுதியில் பெண் தற்கொலைக்கு காரணம் என்ன?


ஏற்காடு தனியார் விடுதியில் பெண் தற்கொலைக்கு காரணம் என்ன?
x
தினத்தந்தி 8 Jan 2022 12:59 AM IST (Updated: 8 Jan 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு தனியார் விடுதியில் பெண் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்காடு, ஜன.8-
ஏற்காடு தனியார் விடுதியில் பெண் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழுந்தனுடன் கள்ளக்காதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன்கள் பிரபு, விஜய். பிரபுவின் மனைவி மஞ்சு (வயது 28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு சென்றதால் தனிமையில் இருந்த மஞ்சுவுக்கு தனது கொழுந்தன் விஜய்யுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 
இதன் காரணமாக 2 பேரும் நெருங்கி பழகி உள்ளனர். இதுவே அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறி விட்டது. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி ஏற்காட்டுக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 
தற்கொலை
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஏற்காடு வந்த அவர்கள் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அங்கு இரவில் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கழிவறையில் மஞ்சு நிர்வாண நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது கொழுந்தன் விஜயை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.  மேலும் மஞ்சுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் விஜயை விடுவித்தனர்.
பரபரப்பு தகவல்கள்
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
மஞ்சுவுக்கும், அவரது கொழுந்தன் விஜய்க்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதால், அவர்கள் அடிக்கடி ஏற்காட்டுக்கு வந்து விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். அவர்கள் 2 பேரும் சுமார் 20 தடவை ஏற்காட்டுக்கு வந்து சந்தோஷமாக இருந்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மஞ்சுவுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது விஜய்க்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் 5-ந் தேதி ஏற்காட்டுக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த போது, இது குறித்து விஜய், மஞ்சுவிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மீது விஜய் சந்தேகம் அடைந்ததால், மனமுடைந்த மஞ்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story