கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் பார்சலில் வழங்கப்பட்டது.
சிவகாசி,
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் பார்சலில் வழங்கப்பட்டது.
ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து சிவகாசி பகுதியில் இரவு 9.30 மணி முதல் மக்கள் நட மாட்டம் குறைய தொடங்கியது.
இரவு 10 மணிக்கு நகரம் முழுவதும் அமைதியாக காட்சி அளித்தது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அன்னதானம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு சிவகாசியில் உள்ள சிவன் கோவில் நடை திறந்து பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம். தமிழக அரசின் உத்தரவின்படி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.
பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது. இதே போல் மதியம் 100 பேருக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படும். கொரோனா பரவல் காரணமாக கோவில் வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் பார்சல் மூலம் வழங்கப்பட்டது.
பூஜை ெபாருட்கள்
சிவகாசி சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் கோவில் வெளியே நின்ற வாறு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூஜை பொருட் களை கோவில் நிர்வாகம் சார்பில் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதே போல் பெருமாள் கோவில், முருகன் கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன்கோவில், அய்யப்பன் கோவில், திருத்தங்கல் பெருமாள் கோவில், முருகன் கோவில், காளியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவில் வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன்
இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆதலால் பக்தர்கள் இன்றி கோவில் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆண்டாள் ேகாவிலிலும் பக்தர்கள் வருகையின்றி வெறிச்கோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story