20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு


20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
x
தினத்தந்தி 7 Jan 2022 7:43 PM GMT (Updated: 2022-01-08T01:13:16+05:30)

சிவகாசி வட்டாரத்தில் இன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை முடிவு செய்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிவகாசி, 
சிவகாசி வட்டாரத்தில் இன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை முடிவு செய்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம் 
சிவகாசி வட்டாரத்தில் இதுவரை 17 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 77 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை 45 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. அதே போல் கடந்த 4 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களில் அதிக அளவில் பொதுமக்களை வரவழைத்து தடுப்பூசி போட வசதியாக சிவ காசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
இதில் தாசில்தார்கள் ராஜ் குமார், சீனிவாசன், மருத்துவ அதிகாரி வைரக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வளர்ச்சித்துறை அதிகாரிகள், சுகா தாரத்துறையினர், பஞ்சாயத்து தலைவர்கள், செயலர்கள், என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து பகுதியில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இருப்பதாகவும், அவர்களை முகாமுக்கு அழைத்து வர வேண்டிய பணிகளை துரிதமாக செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டர் வலியுறுத்தினார்.
20 ஆயிரம்
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சிவகாசி வட்டாரத்தில் இன்று  186 இடங்களில் நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி  முகாம்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. எனவே இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  இவர்கள் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story