விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அம்மாப்பேட்டை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மழையின் போது வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்து உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அம்மாப்பேட்டை பகுதியில் விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அம்மாப்பேட்டை பஸ் நிலையம் எதிரில் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அழுகிய பயிர்களை வைத்து மறியல் நடைபெற்றது.
கோஷங்கள்
இ்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சாமு. தர்மராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலு, நகர செயலாளர் கே.ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story