பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
விருதுநகரில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி விளக்கி பேசினார். மேலும் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்ட அலுவலர்கள் முத்தையா, முனியசாமி, திருப்பதி மற்றும் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கினர். பயிற்சியாளர்களாக வட்டார கல்வி அலுவலர் அரவிந்தன், திருப்பதி, முருகன், முருகேசன், ராஜலட்சுமி, கருப்பசாமி, சரவணகுமார், செல்வக்குமார் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் ஜமுனா ராணி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story