அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்


அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
x
தினத்தந்தி 8 Jan 2022 1:51 AM IST (Updated: 8 Jan 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு விருப்பம் தெரிவித்துள்ளது.

மதுரை, 
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு விருப்பம் தெரிவித்துள்ளது.
பள்ளியில் அடிப்படை வசதிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் அரசு உயர்்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 350 மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. தற்போது பள்ளியைச் சுற்றி ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இரவு நேர காவலர்கள் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து உள்ளன. இங்குள்ள ஆய்வக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்து, இரவு நேர காவலாளியை நியமிக்கவும், நாப்கின் எரியூட்டும் எந்திரம் பொருத்தவும், கூடுதல் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என இந்த கோர்ட்டு நம்புகிறது. 
மேலும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story