தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 1:56 AM IST (Updated: 8 Jan 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் ஓடும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் வேலுமாணிக்கம் தியேட்டர் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இந்த கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி ெபாதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் பரவிவருகின்றது. பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துதர வேண்டும். 
பொதுமக்கள், ராமநாதபுரம்.

குப்பை கிடங்கான கழிவுநீர்கால்வாய்  
  மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி ஊராட்சி சின்ன துைரக்குளம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடாக உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், கொட்டாம்பட்டி.


 பள்ளம் மூடப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள நந்தவனப்பட்டி வடக்கு தெரு நுைழவுவாயில் பிள்ளையார் ேகாவில் அருகில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டப்பட்டது. ஆனால் இந்த பள்ளம் பல வாரங்களாக மூடப்படாமல் உள்ளது. இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சாலையில் உள்ள பள்ளத்தை மூட வேண்டும். 
குமார், சாத்தூர். 
குண்டும், குழியுமான சாலை 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் உள்ள பல பகுதிகளில் உள்ள சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களும், முதியவர்களும் வாகனங்களில் செல்லும் போது சிரமப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
புஷ்பா, காரைக்குடி. 
கால்வாய் தூர்வாரப்படுமா?
மதுரை மாவட்டம் அவனியாபுரம் 60-வது வார்டு கொத்தளத்தெரு மற்றும் ராமசாமிகோனார் தெருவில் கழிவுநீர் கால்வாய்  தூர்வாரப்படவில்ைல. கழிவுநீர் சாைலயில் தேங்குவதால் இப்பகுதிைய கடந்து செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
மாரிச்சாமி, அவனியாபுரம்.

Next Story