மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மனைவி அம்சவள்ளி(வயது 70). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கலியபெருமாள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவர் உயிருடன் இருக்கும்போது தொடங்கிய வீடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாடியில் புதிதாக கட்டப்பட்ட சுவற்றுக்கு அம்சவள்ளி தண்ணீர் தெளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி உரசியதில் அம்சவள்ளி தூக்கி வீசப்பட்டு, கம்பிகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார், அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story