மது விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது


மது விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2022 8:38 PM GMT (Updated: 2022-01-08T02:08:15+05:30)

மது விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது உடையார்பாளையம் திருச்சி மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த பாண்டித்துரை(38), அவரது மனைவி சத்தியகலா(38), கைக்களநாட்டார் தெருவை சேர்ந்த குமார்(47), அரிசிகாரத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி(60) ஆகியோர் அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story