மின்சாரம் பாய்ந்து மயில் சாவு
மின்சாரம் பாய்ந்து மயில் செத்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் தஞ்சாவூர் காமாட்சி அம்மன் கோவிலின் மானிய நஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த வயல்களின் குறுக்கே விவசாய மின் இணைப்புகளுக்கு மின் கம்பங்கள் நடப்பட்டு உயர் அழுத்த மின்சாரம் பாயும் மின்கம்பிகள் செல்கின்றன. நேற்று மாலை அந்த பகுதியில் சுமார் 20 மயில்கள் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு மயில் மின்கம்பியின் மீது மோதியது. இதில் மின் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட அந்த மயில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மயிலை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story