3 குழந்தைகளின் தந்தை விஷ மாத்திரை தின்று தற்கொலை


3 குழந்தைகளின் தந்தை விஷ மாத்திரை தின்று தற்கொலை
x
தினத்தந்தி 8 Jan 2022 2:18 AM IST (Updated: 8 Jan 2022 4:02 AM IST)
t-max-icont-min-icon

3 குழந்தைகளின் தந்தை விஷ மாத்திரை தின்று தற்கொலை

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே பேரை வலியவிளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது 54). தொழிலாளியான இவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அந்த காயம் குணமாகாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று தென்னை மரத்திற்கு வைக்கக் கூடிய விஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். உடனே அவரை அங்கிருந்து மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story