கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குமரியில் நேற்று ஒரே நாளில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரியில் நேற்று ஒரே நாளில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா வியாபாரிகள்
குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது சாமியார்மடம் சந்தைவீடு பகுதியை சேர்ந்தவர் முகமது பிரோஸ்கான் (வயது 25). இவர் மீது திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உள்ளன. இருப்பினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் முகமது பிரோஸ்கான் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்ற அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து திருவட்டார் போலீசார் நேற்று முகமது பிரோஸ்கானை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதேபோல் கன்னணூர் முளவிளை பகுதியை சோ்ந்த சுபின் என்ற சுபின்ராஜ் (24) மற்றும் ஜோஸ் (27) ஆகியோர் மீதும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உள்ளன. அவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று சுபின் என்ற சுபின்ராஜ் மற்றும் ஜோஸ் ஆகிய 2 பேரையும் திருவட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
ஒரே நாளில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கஞ்சா வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story