தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 8 Jan 2022 2:40 AM IST (Updated: 8 Jan 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

தாளவாடி
தாளவாடியை அடுத்த மல்லன்குழியை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 45), விவசாயியான இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் மஞ்சள், தென்னை ஆகியவற்றை பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் சாந்தப்பனின் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னைகளை முறித்து தின்றன. அங்கு காவலுக்கு படுத்திருந்த சாந்தப்பன் யானைகளை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் அருகில் உள்ள விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் விவசாயிகளும், ஜீர்கள்ளி வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தகர டப்பாவால் ஒலி எழுப்பியும் யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த 5 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. 
யானைகள் அட்டகாசம் செய்ததில் 26 தென்னைகளும், 1 ஏக்கர் பரப்பளவிலான மஞ்சள் பயிரும் சேதம் அடைந்தது. 

Next Story