செங்கோட்டை: முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்
செங்கோட்டை:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் இளவரசன் ஆகியோர் அறிவுரைப்படி, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, சுகாதாரப்பணிகள் மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், காளியப்பன் ஆகியோர் செங்கோட்டையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினர்.
Related Tags :
Next Story