விஷம் கலந்த மதுவை குடித்து விவசாயி தற்கொலை
நித்திரவிளை அருகே விஷம் கலந்த மதுவை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே விஷம் கலந்த மதுவை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 56), விவசாயி. இவருடைய மனைவி புகழ்மேரி கமலம் (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
செல்வனுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு வேலைக்கு எதுவும் செல்லாமல் அவர் வீட்டில் இருந்துள்ளார். அதே சமயத்தில் அவர் மது பழக்கத்திற்கும் அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் புகழ்மேரி கமலம் உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் செல்வன் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். பின்னர் வெளியே சென்ற புகழ்மேரி கமலம் வீட்டுக்கு திரும்பிய போது செல்வன் வீட்டில் இல்லை.
தற்கொலை
இதனால் அவரை பல இடங்களில் மகனுடன் சென்று தேடி பார்த்தார். ஆனால் அவரை பற்றிய தகவல் இல்லை.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் வாழை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை கண்ட ஒருவர், புகழ்மேரி கமலத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் அக்கம்பக்கத்தினருடன் விரைந்து சென்று பார்த்தார். அங்கு செல்வன் தண்ணீர், தண்ணீர் என கேட்டு உயிருக்காக போராடி கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சற்று நேரத்தில் செல்வன் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்தில் 2 மதுபாட்டில்கள், விஷ பவுடர் இருந்தது. இதனால் அவர் விஷ பவுடரை மதுவில் கலந்து குடித்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து புகழ்மேரி கமலம் கொடுத்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story