திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2022 8:47 AM GMT (Updated: 2022-01-08T14:17:54+05:30)

திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதா (21) இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் ராதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் போலீசார் ராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

Next Story