புதுச்சேரி-மாமல்லபுரம் விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது - கலெக்டர் தகவல்


புதுச்சேரி-மாமல்லபுரம் விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2022 2:32 PM IST (Updated: 8 Jan 2022 2:32 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுச்சேரி-மாமல்லபுரம் விரைவுச்சாலை பணிக்காக மாமல்லபுரம் முதல் பனையூர் வரை 2018-ம் ஆண்டு முதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் மற்றும் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட மாமல்லபுரம், குண்ணத்தூர், பூஞ்சேரி, பெருமாளேரி, கடம்பாடி, மணமை, நெய்குப்பி, வாயலூர், புதுப்பட்டினம், விட்டிலாபுரம், கடலூர், வடபட்டினம், கொடப்பட்டினம், கீழார் கொல்லை, கூவத்தூர், முகையூர், பரமன்கேணி, முதலியார் குப்பம், கெங்கதேவன் குப்பம், வேம்பனூர், பனையூர், கடுக்கலூர், கோட்டைக்காடு ஆகிய கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட கிராம நிலங்களில் இடங்கள் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இழப்பீட்டுத்தொகை பெற்று கொண்ட உரிமையாளர்கள் எவரும் அந்த நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story