நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை விறுவிறுப்பு
நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடும். இங்கு காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த சந்தையில் நேற்று கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தைக்கு வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான நபர்கள் கரும்புகளை வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இதையொட்டி வியாபாரிகள் கொல்லிமலை அடிவார பகுதியில் இருந்து கரும்புகளை வாங்கி குவித்து இருந்தனர். இவை அவற்றின் தரத்தை பொறுத்து ஜோடி ரூ.100, 120-க்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு மழைபொழிவு நன்றாக இருந்ததால் கரும்பு விளைச்சல் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோல பொடிகளையும் பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story