நாமக்கல் மண்டலத்தில், 3 நாட்களில் முட்டை விலை 45 காசுகள் வீழ்ச்சி 460 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 3 நாட்களில் 45 காசுகள் வீழ்ச்சி அடைந்து 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 3 நாட்களில் 45 காசுகள் வீழ்ச்சி அடைந்து 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
20 காசுகள் வீழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-475, ஐதராபாத்-440, விஜயவாடா-470, மைசூரு-475, மும்பை-505, பெங்களூரு-480, கொல்கத்தா-540, டெல்லி-495.
முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.84-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு முட்டை விற்பனை மந்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக முட்டை விற்பனை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 45 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story